Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சீனாவைத் தொடர்ந்து அமெரிக்கா! பங்குச் சந்தையில் ரூ.190 லட்சம் கோடி இழப்பு

சீனாவைத் தொடர்ந்து அமெரிக்கா! பங்குச் சந்தையில் ரூ.190 லட்சம் கோடி இழப்பு

கூகுள், அமேசான், என்விடியா மற்றும் இன்டெல் ஆகிய முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கடுமையாக வீழ்ச்சியடைந்தன.

பகிரவும் WhatsApp Facebook

சீனாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் 'செயற்கை நுண்ணறிவு' (ஏஐ) சார்ந்த தொழில்நுட்பத் துறை பெரும் சரிவைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியாக்கப்பட்ட முன்னணி பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள் எதிர்பார்த்த லாபத்தைத் தரவில்லை. இதனால் உலக அளவில் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்து, தங்கள் பங்குகளை அவசர அவசரமாக விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக, அமெரிக்காவின் 'நாஸ்டாக்' பங்குச் சந்தையில் அக்டோபர் மாதத்தில் மட்டும் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பில் சுமார் 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 190 லட்சம் கோடி ரூபாய்) சரிந்து பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, தொழில்நுட்ப உலகை ஆட்டிப்படைக்கும் கூகுள், அமேசான், என்விடியா மற்றும் இன்டெல் ஆகிய முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கடுமையாக வீழ்ச்சியடைந்தன.

ஏஐ தொழில்நுட்பத்திற்காக பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்த நிறுவனங்களுக்கு, அதற்கேற்ற லாபம் உடனடியாக கிடைக்காததே இந்த வீழ்ச்சிக்கு முதன்மை காரணமாக கூறப்படுகிறது.

முன்பு சீனாவில் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்களில் செய்யப்பட்ட பெரும் முதலீடுகளுக்கு ஏற்ற லாபம் உடனடியாக கிடைக்காததால், முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை அவசர அவசரமாக விற்கத் தொடங்கினர். இதனால் கடந்த மே மாதம் முதல் பங்குச் சந்தையில் ஏஐ நிறுவனங்களின் பங்குகள் சுமார் 40 சதவீதம் வரை கடும் சரிவை சந்தித்தன. 

இந்த தொடர் வீழ்ச்சியின் காரணமாக சீன பங்குச் சந்தை வர்த்தகத்தில் சுமார் 2.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 200 லட்சம் கோடி ரூபாய்) இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி
மத்திய அரசு வரிப் பகிர்வு - தமிழகத்துக்கு ரூ.4,466 கோடி ஒதுக்கீடு
அடுத்த செய்தி
இஸ்ரேல் பிரதமரை நேரடியாக தேர்ந்தெடுக்க திட்டம்

தொடர்புடைய செய்திகள்